2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

 

மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி பகுதியில், இன்று காலை (3) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு - ஊறணி பகுதியிலிருந்து ஆரையம்பதி நோக்கிச் சென்ற காரானது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பஸ்ஸூக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியில், ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் 72 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர், தனது ஊரான அரசடித்தீவுக்குச் செல்வதற்கு நின்றவேளை, இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .