2020 நவம்பர் 25, புதன்கிழமை

வியாபாரிகள் 40 பேருக்கு புதிய கடைகள்

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி  

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் இதுவரைகாலமும், ஒலைக் கொட்டில்களில் தமது சிறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த 40 வியாபாரிகளின் நலன்கருதி, புதிதாக கடைத் தொகுதியொன்று அமைக்கப்பட்டு, இன்று (13) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான, மேகசுந்தரம் வினோராஜின் சொந்த நிதியையும் பயன்படுத்தி இந்தக் கடைத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிராம பெரியோர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--