Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்முனைப் பற்று பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்ட அறிக்கை 13 வாக்குகளால் தோல்வியடைந்தது.
மண்முனைப் பற்று பிரதேச சபையின் மாதார்ந்த அமர்வு, சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தலைமையில் இன்று (26) நடைபெற்றது.
இதில் சபையின் பிரதி தவிசாளர் எம்.சுந்தரலிங்கம் சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் உட்பட சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து, சபையின் கூட்ட நிகழ்ச்சி நிரலுக்கேற்ப கூட்டம் நடைபெற்று பின்னர் மண்முனைப் பற்று பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட அறிக்கையை சபையில் முன் வைத்து தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் விளக்கமளித்தார்.
சபை அமர்வில் கலந்து கொண்ட மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் அறிக்கையை வாக்கெடுப்புக்கு விடுமாறு ஏகமனதாக கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, தவிசாளர், வரவு – செலவுத்திட்ட அறிக்கையை பகிரங்க வாக்கெடுப்புக்கு விட்டார்.
இதன் போது சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் மாத்திரமே வரவு -திட்டத்துக்காக ஆதரவு தெரிவித்து கையை உயர்த்தியதுடன், சபையில் இருந்த 13 உறுப்பினர்களும் எதிரப்புத் தெரிவித்து, எதிராக கைகளை உயர்த்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .