2021 மே 06, வியாழக்கிழமை

வருடாந்த பொலிஸ் பரிசோதனை

Gavitha   / 2016 ஜூலை 23 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோனைகள் வியாழக்கிழமை (21) இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டினேஸ் கருணாநாயக்க மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் (மாவட்டம்-1) கீர்த்தி ரட்னாயக்க ஆகியோர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பொலிஸாரின் அணிவகுப்பு, வாகனங்கள், மோப்ப நாய்கள் என்பன பரிசோதிக்கப்பட்டதோடு பொலிஸ் நிலையம் மற்றும் வளாகத்தில் உள்ள பௌதீக வளங்கள் உள்ளிட்ட யாவும் பரிசோதிக்கப்பட்டன.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சி.ஐ. ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .