2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 ஜனவரி 05 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள், காந்திப்பூங்காவில் நேற்று (05) ஒன்றுகூடி விரைவாக தமக்கான நியமனத்தைத் தருமாறு, கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி நியமனத்தை வழங்க வேண்டுமெனவும் அவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இம்மாதத்துக்குள்ளாக விரைவாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிரன் வேண்டுகோள் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .