2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வெள்ளத்தைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில், வருடாந்தம் ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை, மாநகர சபை ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்துக்கமைய, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய், கல்லடி, காத்தான்குடி போன்ற பிரதேசங்களிலிருந்து பாய்ந்துவரும் வெள்ளநீர் ஒன்றுசேரும் இடமான கல்லடிப் பாலத்தின் இறக்கத்தில், ஒரு மில்லியன் ரூபாய் செலவில், வடிகாலொன்று அமைக்கப்பட்டு வருவதாக, மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.

இக்கால்வாய் ஊடாகச் செல்லும் வெள்ளநீர், நேரடியாக மட்டக்களப்பு வாவியில் கலப்பதால், குறித்த இடங்களில் வெள்ளநீர் தேங்குவது தடுக்கப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வெள்ளநீர் பாரியளவில் தேங்கி நிற்கும் இடங்களில், வெள்ளம் இலகுவாக வடிந்தோடக் கூடியவாறு, பாரிய கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றனவென, மாநகரசபை சுகாதாரக் குழுத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--