2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

வாழைச்சேனையில் இரு சடலங்கள் மீட்பு

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு – வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி, மானாவாரிக் கண்டம் எனும் பகுதியில் இளம் குடும்பஸ்தர்களான கணவனதும் மனைவியினதும் சடலங்கள், இன்று (16) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளனவெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நாகதம்பிரான் கோயில் வீதி, கிண்ணையடி வாழைச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த நமசிவாயம் குணம் (வயது 35) விநாயகன் தேவி (வயது 30) ஆகிய இருவரினதும் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.

வாகனேரி மானாவாரிக் கண்டத்திலுள்ள வயல் வாடியியில் மனைவியும் அங்குள்ள காட்டுப் பகுதியில் கணவனும் சடலமாகக் கிடைப்பதை அவதானித்த அப்பகுதியால் சென்றவர்கள் பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், இருவரினதும் சடங்களை மீட்டுள்ளனர்.

சடலங்கள், உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .