2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

வாகரையில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நல்லதம்பி நித்தியானந்தன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அரசாங்கக் காணிகளைச் சட்டவிரோதமாக ஏனையோருக்கு விற்பனை செய்தல், காடு அழித்தல் ஆகிய செயற்பாடுகளைத்; உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி வாகரை வடக்குப் பிரதேச செயலகத்தின் பிரதான வாயில் கதவுக்குப் பூட்டுப் போட்டு அப்பிரதேச மக்கள் இன்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதூர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது.  

இப்பிரதேச செயலகப் பிரிவில் கதிரவெளி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட புச்சாக்கேணி, புதூர் ஆகிய பகுதிகளிலேயே அரசாங்கக் காணிகளை வேறு நபர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்தல், கடாழித்தல் ஆகிய செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கதிரவெளி மற்றும் புச்சாக்கேணி கடற்கரையோரப் பகுதிகளை அண்டிய  அரசாங்கக்  காணிகள் சுமார் 65  ஏக்கர் உறுதி முடிக்கப்பட்டு வர்த்தகப் புள்ளிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

ஆகவே, இப்பகுதிகளிலுள்ள அரசாங்கக் காணிகளை உடனடியாக பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.  

இப்பிரச்சினை தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களின்போது, அரசியல்வாதிகளிடம் எடுத்துக்கூறிய போதிலும், உரிய தீர்வு எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.  

இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைதந்த வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகியிடம் மகஜரை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். அத்துடன், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். குறித்த பகுதிகளுக்கு பொலிஸாருடன் சென்று உரிய நடவடிக்கையை எடுப்பதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதனை அடுத்து, பூட்டுப் போடப்பட்டிருந்த பிரதேச செயலக வாயில் கதவை பொதுமக்கள் திறந்த நிலையில், அதன் உத்தியோகஸ்தர்கள் உள்நுழைந்தனர். பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுக்  கலைந்து சென்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .