2021 ஜனவரி 23, சனிக்கிழமை

'விகாரைகளை அமைக்க முற்படுவது நல்லிணக்கத்துக்;கு சவாலாக அமையும்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 10 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கடந்த யுத்த சூழ்நிலையின்போது, பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் வழிபாட்டுக்காக  வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளை மையமாகக்கொண்டு தற்போது பௌத்த விகாரைகளை அமைக்க முற்படுவது இந்த நாட்டில் எதிர்பார்க்கப்படும் நல்லிணக்கத்துக்;கு சவாலாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இருப்பினும், தாம் ஏனைய மதத்தவர்களுக்கோ, இனத்தவர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல எனவும் அவர் கூறினார்.  
 
மட்டக்களப்பு, இலுப்படிச்சேனை ஸ்ரீமுத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அங்கு நேற்றுச் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'எமது பிரதேசங்களில் கோவில்கள் பெருகிக்கொண்டு செல்கின்றபோதிலும், மக்கள் மத்தியில் ஆன்மிகம் குறைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில்  900 க்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கோவில்கள் பதிவு செய்யப்படவில்லை' என்றார்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .