2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

3 வீடுகளில் திருட்டு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில்  உள்ள இரண்டு  வீடுகளில் ஒரு வீட்டில் ஒரு பவுண் தங்கச்சங்கிலியும் மற்றைய வீட்டில் 13 பவுண் தங்கநகைகளுடன் அவ்வீட்டு உரிமையாளரின் தன்னியக்கப் பணப்பரிமாற்று அட்டை திருடப்பட்டு வங்கியிருப்பில் இருந்த 38 ஆயிரம் பணமும் திருடப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் வீதியிலும் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேற்படி வீடுகளில் எவரும்  இல்லாத நிலையிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .