2021 மே 18, செவ்வாய்க்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் தொழில் கல்வி கற்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கப்பலில் தொழில் பெறுவதற்கான பயிற்சிகள் 7 மாதங்கள் கொண்டதாகவும் தேசிய தொழில் சான்றிதழ் கற்கை நெறிகளான கடற்துறை வெல்டிங் தொழில்நுட்பவியலாளர், கடற் சுழியோடிகள், சமுத்திரவியல் இயந்திர தொழில்நுட்பவியலாளர், வெளிப்புறத்தில் பொருத்தும் என்ஜின் தொழில்நுட்பவியலாளர், கடற்தொழில் தொழில்நுட்பவியலாளர், கப்பல் தலைமைத்துவத்துக்கான பயிற்சி ஆகியன 6 மாதங்களைக் கொண்டதாகவும் நடைபெறுகின்றன.

இதேவேளை, குறுகிய காலப் பயிற்சிகளாக நீச்சல் பயிற்சி, கடல் வரைபடங்களை வாசித்தல் தொடர்பாடல் மற்றும் செய்மதி செயற்படுத்தல் ஆகிய பயிற்சிகள் ஒரு மாத காலத்தைக் கொண்டதாகவும் வெளி இணை இயந்திரம் பழுது பார்த்தல், வலை பின்னலும் திருத்துதலும் வைபர் படகு திருத்துதல், உணவு பதனிடலும் அறுவடைக்குப் பிந்திய முகாமையும் உயிர் பாதுகாப்பு, முதலுதவி  ஆகிய பயிற்சிகள் ஒரு வார காலத்துக்குட்பட்டவையாகவும் அமைந்துள்ளன.

விண்ணப்பிக்க விரும்புவோர் உதவிப் பணிப்பாளர், சமுத்திரவியல் பல்கலைக்கழகம், நாவலடி, மட்டக்களப்பு என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .