2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

'விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறைவு'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

அனர்த்தம் நடந்த பின்னரும் இதற்கான சட்டமூலம் வரையறுக்கப்பட்ட பின்னரும் இதற்கான சகல விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்ட பின்னரும் அதைக் கடைப்பிடிப்பது என்பது மிகக்குறைவாகவுள்ளது என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (26) காலை மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், 'சட்டத்தினுடைய நிறைவேற்றமும் அதனூடாக செயற்படுத்தப்படுகின்ற அத்தனை திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி செயலகத்தினால் நடாத்தப்பட்ட மகா நாட்டில் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டடுள்ளது. ஜனவரி 8ஆம் திகதியிலிருந்து  ஜனாதிபதி முன்னெடுக்க இருக்கின்ற நிலைத்துநிற்கும் அபிவருத்தியின் 17 குறிக்கோள்கள் என்பதை முன்னிறுத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் படியாக அறிவுறுத்தல்கள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில இயற்கையினுடைய அழிவுகள் அதன் செயற்பாடுகள் ஒரு மனிதன் எவ்வாறு இயைந்து செல்ல வேண்டும் என்பது தான் மிக முக்கியமானது. இயற்கை தன்னுடைய வழியிலே தன்னையும் நெறிப்படுத்தி மனித உயிர்களையும் பாதுகாத்துக் கொண்டு வருகின்ற நிலைமை இருக்கும். மனிதனுடைய செயற்பாடுகள் திட்டமிட்ட முறையில் சரியாக முன்னெடுக்கப்படாமையால் இந்த அழிவுகள், ஆபத்துக்கள், எதிர்பாராத வகையில் எங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

தற்பேது பாரிய வரட்சியை நோக்கி இலங்கை சென்று கொண்டிருக்கிறது. உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகின்ற ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைப்போல் வெள்ளம் வந்தால் வெள்ளத்தால் அழிந்து போகின்ற பயிர்கள் அழிந்து போகின்ற கால்நடைகளும் மக்களும் ஒரு சவாலாக இருக்கி;ன்றது. இவ்விதமாக பல்வேறு அனர்த்தங்களை நாங்கள் எதிர்கொண்டிருக்கின்றோம்.

இதிலும் மிக முக்கியமானது தற்பேது ஐக்கிய நாடுகள் சபையினாலும் சகல அரசாங்கங்களினாலும் ஒப்பந்த ரீதியிலே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற வகையிலேயே நிலைத்து நிற்கின்ற அபிவிருத்தியின் 17 குறிக்கோள்கள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. அவற்றிலே மிக முக்கியமாக இந்த அபிவிருத்தி என்பது ஒவ்வொருவரும் தாங்கள் நினைத்ததுபோல் செயற்படாமல், சரியான நிபுணத்துவ ஆலோசனையோடு நிலைத்து நிற்கின்ற, மக்களுக்கு நிரந்தரமான பொருளாதார அபிவிருத்தியையும் அவர்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பையும் தருகின்ற அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்கின்ற வகையில் அறிவுறுத்தும் படி கேட்கப்பட்டிருக்கிறது.

அனர்த்தம் நடந்த பின்னரும் இதற்கான சட்டமூலம் வரையறுக்கப்பட்ட பின்னரும் இதற்கான சகல விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்ட பின்னரும் அதைக் கடைப்பிடிப்பது என்பது மிகக்குறைவாகவுள்ளது.

மலை நாட்டில் ஏற்படுகின்ற அபிவிருத்தி தான் அங்கே ஏற்படுகின்ற நிலச்சரிவுக்கு ஒரு அடிப்படை. அதே போல் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் நாம் செய்கின்ற பாரிய அபிவருத்தி திட்டங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும். இவைகயையெல்லாம் தவிர்த்து நிலையான அபிவிருத்திக்கு செல்வதற்கு இந்த நாளை நாம் உறுதிபூண்டு கொண்டு இந்த அனர்த்தத்தiலே தங்களுடைய உயிர்களையும் உடமைகளையும் இழந்த குடும்பங்களுக்கும் இறைவனுடைய அருளையும் ஆத்மா சாந்தியையும் வேண்டி பிராத்தித்து அவர்களோடு எமது துன்பங்களை ஆத்மீக ரீதியாக உள ரீதியாக பகிர்வோம்'; என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .