2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு -கொழும்பு நெடுஞ்சாலையில்  கிரிமுட்டிபண்ணை ஏற்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து பள்ளத்தில் விழுந்துள்ளது. இதன்போது, முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் கல்முனை பழைய சந்தை வீதியைச் சேர்ந்த எம்.சரீப்தீன் (வயது 36) என்பவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

கல்முனையிலிருந்து ஓட்டமாவடியை நோக்கி இவர் தனியே முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருக்கும்போது கிரிமுட்டிபண்ணை ஏற்றம் வளைவில் முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விழுந்துள்ளது.

வீதியால் சென்றவர்கள் விபத்துக்குள்ளானவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--