Niroshini / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்,வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடிப்பொலிஸார் தெரிவித்தனர்.
ஓந்தாச்சிமடத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு கோட்டைக்கல்லாற்றை நோக்கி முச்சக்கரவண்டி மீது பின்னால் வந்த எரிபொருள் நிரப்பிய வாகனம் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த உ.ஈஸ்வரி (50 வயது), வி.தினோதன் (06 வயது), ஜீ.சிந்துஜா (இரண்டரை வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026