2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ.சு.கவின் மட்டு.மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களாக ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.அறூஸ், ஏ.எம்.மாஹிர் ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி மாவட்ட அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று (21)  நடைபெற்றது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரியவர்களிடம் நியமனக் கடிதத்தை கையளித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே, குறித்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .