2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

புதையல் தோண்டும் முயற்சியில் கைதான 09 பேரிடம் தொடர்ந்து விசாரணை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 09 பேரையும்  பாதுகாப்பு அமைச்சின் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான விசேட உத்தரவுடன் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள் என்று கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.மஹலேகம் தெரிவித்தார்.

காரக்காடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்தாகக் கூறப்படும் 09 பேர் கடந்த 28ஆம் திகதி  கைதுசெய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட இடத்தில் பணம் அல்லது பெறுமதியான பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உதவி நாடப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.மஹலேகம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .