Editorial / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சாய் தன்ஷிகாவுக்கு எல்லாம் என்னப்பா கஷ்டம் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தான் படாத கஷ்டமே கிடையாது என்று சொல்லி அதிர வைத்துவிட்டார் விஷாலின் வருங்கால மனைவி. பலரும் சாய் தன்ஷிகாவுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.
சாய் தன்ஷிகா நடித்த யோகிடா படம் தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. கவுதம் கிருஷ்ணா இயக்கிய அந்த படத்தில் ரிஸ்க் எடுத்து தானே சண்டை காட்சிகளில் நடித்தார் சாய் தன்ஷிகா. டூப் வேண்டாம் என்று சொல்லி அவர் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்தபோது பீர் பாட்டில் குத்தி அவருக்கு கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டது.
இப்படி அவர் கஷ்டப்பட்டு நடித்த யோகிடா படம் பார்ப்பவர்கள் சாய் தன்ஷிகாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள். 17 ஆண்டுகளாக தனக்கு சினிமா பட வாய்ப்பு வந்து கொண்டிருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார் அவர். இந்நிலையில் அவர் தன்னை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சாய் தன்ஷிகாவை பார்த்தாலே எப்பா இந்த பொண்ணு ரொம்ப போல்டு என்று தான் அனைவரும் சொல்வார்கள். அவர்லாம் எதையும் தாங்கும் இதயம். இந்த புள்ளக்கு கண்ணீர் வராது என்று மக்கள் சொல்லும் அளவுக்கு போல்டு என பெயர் எடுத்திருக்கிறார்.
ஆனால் தான் போல்டு எல்லாம் இல்லை என்றும், கண்ணீர் விடும் ஆள் என்றும் தற்போது கூறியிருக்கிறார் சாய் தன்ஷிகா. நான் படாத கஷ்டமே கிடையாது என்று சாய் தன்ஷிகா சொன்னதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்களை பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. எந்த கஷ்டம் வந்தாலும் பல்லைக்கடித்துக் கொண்டு தாங்கிக் கொண்டு இந்த உலகத்தை பொறுத்தவரை எல்லாம் நல்லபடியாக நடப்பதாக இருக்கும் ஆட்களில் சாய் தன்ஷிகாவும் ஒருவர் போன்று.
கஷ்டங்களை எல்லாம் தாண்டியும் தைரியமாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை சாய் தன்ஷிகா. நீங்கள் மனைவியாக கிடைக்க விஷால் அண்ணா கொடுத்து வைத்திருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.
ரொம்ப எமோஷனலாக இருத்தால் அழுதுவிடுவேன் என்கிறார் சாய் தன்ஷிகா. நடிகையாக இருக்கும் அவருக்கு இயக்குநராகும் ஆசை இருக்கிறதாம். ஆனால் இயக்கம் என்பது லேசுபட்ட காரியம் இல்லை. உதவியாளராக இருந்து கற்க வேண்டும். அதன் பிறகு வாய்ப்பு கிடைத்தால் படம் இயக்கலாம். இது ஜோக் கிடையாது. நான் படம் இயக்க கற்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் சாய் தன்ஷிகா.
41 minute ago
51 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
59 minute ago