2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாவட்ட பள்ளிவாசல்களின் புனரமைப்புக்கு ரூ.1 கோடி நிதியுதவி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 16 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

2010ஆம் ஆண்டைய தேசிய மீலாத் விழாவையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாயில்களின் புனரமைப்பு பணிகளுக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 1 கோடி ரூபாய் நிதியினை வழங்கியுள்ளதாக திணக்களத்தின் நிதி பிரதி பணிப்பாளர் எம்.ஆதம்பாவா தெரிவித்தார்.

காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயில்களே இந்நிதி மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

வழங்கப்பட்ட நிதியில் இதுவரையில் 50 சதவீதம் செலவிடப்பட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து நிதியும் செலவிடப்பட்டு புனரமைப்பு பணிகள் நிறைவடையுமென அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .