2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார திட்டத்திற்கு 10 பாடசாலைகள் தெரிவு

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


பாடசாலை மாணவர்களிடையே சுகாதார பழக்க வழக்கத்தினை நடைமுறைப்படுத்தம் முகமாக ரி.டி.எச்  நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார திட்டத்திற்கு பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து போரதீவுக் கோட்டத்திற்குட்பட்ட கஷ்ட, அதிகஷ்டப் பாடசாலைகளென 10 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பின்தங்கிய பிரதேச மாணவர்கள் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினை மற்றும் பாடசாலைகளில் காணப்படும் சுகாதார பிரச்சினை என்பனவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றினை நிவர்த்திசெய்து சுகாதாரத்துடன் கூடிய ஆரோக்கியமான பாடசாலைகளை உருவாக்கும் நோக்குடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக இதற்காக ஒவ்வொரு பாடசாலைகளில் இருந்தும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு  இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மிகமுக்கியமாக கைகழுவும்முறை, மலசலகூடப்பாவனை, சுத்தமான குடிநீரினை எற்படுத்தல், பாடசாலைக்கழிவுகள் அகற்றும் முறை போன்ற சுகாதார பழக்க வழக்கங்களை மாணவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மண்டூர் மகாவித்தியாலயத்தில் திங்கட்கிழமை (31) அதிபர் ந.புஸ்பமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மேற்படி நிறுவனத்தின் கண்காணிப்பு கற்றுக்கொள்ளல் மதிப்பீட்டு உத்தியோகத்தர் என்.அசூமத்,  சுகாதார பயிற்றுவிப்பாளர் வை.சிவகுமார், சுகாதார பயிற்றுவிப்பாளர் திருமதி இ.பாக்கியராசா மற்றும் பாடசாலை சுகாதார கழகத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள் சுகாதாரகழக மாணவர்களும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .