2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 10ஆக உயரும்: நகரபிதா

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


புதிய வட்டார முறையிலான உள்ளூராட்சி நிர்வாக மாற்றத்தின் பயனாக ஏறாவூர் நகரசபையின் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் ஒரு உறுப்பினரால் அதிகரிக்கப்படவுள்ளது என  ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார.

இதன் பிரகாரம் ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 இல் இருந்து  10ஆக உயரும் எனவும் அவர் கூறினார்.

இதனடிப்படையில்; தற்போது தெரிவாகும் தமிழ் அங்கத்தவர் ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு தமிழ் பிரதிநிதியும் தெரிவாகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறினார்.

ஏறாவூர் நகரசபையின் மாதாந்தக் கூட்டம் நகரசபை மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய புதிய வட்டார முறையின்படி தமிழ் மக்கள் வாழும் ஏறாவூர் நான்காம் குறிச்சி மற்றும் ஐந்தாம் குறிச்சிப் பகுதிகள் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு கோயில்புரம் வட்டாரம் எனப் பெயர் சூட்டப்பட்டும். அது இரட்டை அங்கத்தவர் வட்டாரமாக உருவாக்கப்படும்.  தமிழ் மக்களுக்காக இரண்டு அங்கத்தவர்கள் கிடைப்பதால் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அதிக நன்மையடைவார்கள் எனவும் ஏறாவூர் நகரபிதா தெரிவித்தார்.

ஏறாவூர் நகரசபை தனது தலைமையில் அதனைப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு ஏறாவூர் நகரசபையின் ஆதன வரிப் பிரிவு, நானாவித வருமானப் பகுதி ஆகியவை கணினி மயப்படுத்தப்பட்டுள்ளன. சபையின் சகல நிதிசார்  நடவடிக்கைகளும் கணனி மயப்படுத்தப்படவுள்ளன எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X