Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர், சிஹாரா லத்தீப், கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொருட்டு மீனவர்களுக்கு சனிக்கிழமை மீன்பிடி தோணிகள் மற்றும் வலைகள் நேற்று வழங்கப்பட்டன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நெக்டெப் உதவித் திட்டத்தின் கீழ் பிரக்டிக்கல் எக்ஸன் எனும் நிறுவனம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துடன் இணைந்து இவை வழங்கப்பட்டன.
இவ் உதவி வழங்கும் வைபவம் மட்டக்களப்பு கல்லடி கடற்றொழில் திணைக்களத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நெக்டெப் திட்டப் பணிப்பாளர் குரூஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன், பிரக்டிக்கல் எக்ஸன் நிறுவனத்தின் இணைப்பாளர் லாபிர், மீன்பிடி உத்தியோகத்தர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.
கிரான், ஏறாவூர், மன்முனை வடக்கு, வவுணதீவு, வெல்லாவெளி, பட்டிப்பளை, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி ஆகிய பகுதி மீனவர் குடும்பங்களுக்கே இந்த மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதன் போது பாதிக்கப்பட்ட 100 மீனவர்களுக்கு தோணிகள் மற்றும் வலைகள் வழங்கப்பட்டதுடன் மீனவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago