Freelancer / 2026 பெப்ரவரி 23 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குரெகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பல தகவல்களைப் பொலிஸாரிடம் வௌிப்படுத்தியுள்ளார்.
ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று முன்தினம் (21) அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சட்டத்தரணியை டி-56 ரக துப்பாக்கியால் சுட்டவர் இவரே என சந்தேகிக்கப்படுகிறது.
46 வயதான இவர், 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்திலிருந்து சட்டப்பூர்வமாக விலகியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, தாம் இந்த கொலையை செய்ததாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலைக்குப் பின்னர் கொட்டாவ அருகே காரிலிருந்து இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் அம்பலாங்கொடைக்கு சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இவர், கரந்தெனிய சுத்தா என்பவருடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரந்தெனிய சுத்தா தொலைபேசி ஊடாக வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த கொலையைச் செய்ததாக சந்தேகநபர் கூறியுள்ளார்.
கொலை செய்த பின்னர், கரந்தெனிய சுத்தா தனக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் ஹெரோயின் போதைப்பொருளையும் வழங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அவர் கரந்தெனிய சுத்தாவிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், அவர் செய்த வேறு கொலைகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக இதுவரை துப்பாக்கிதாரி உட்பட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
5 minute ago
11 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
30 minute ago