2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

தொப்பிகலையில் மீள்குடியேறிய 1,000 குடும்பங்களுக்கு இராணுவம் நிவாரண உதவி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய தொப்பிகலை குடும்பிமலை பிரதேசங்களிலுள்ள 1000 குடும்பங்களுக்கு இலங்கை இராணுவத்தின் 232ஆவது படைப்பிரிவினர் நிவாரண உதவிகளை இன்று காலை வழங்கினர்.

கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் பொனிபஸ் பெரேரா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் 1000 பாதுகாப்பான குப்பி விளக்குகள், உலருணவுப் பொருட்கள், பாடசாலை கொப்பிகள் உட்பட நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.

குடும்பிமலை முருகன் வித்தியாலய மண்டத்தில் நடைபெற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் வைபவத்தில் தொப்பிலை பிரிவிற்குப் பொறுக்பான பிரிகேடியர் புத்திக வீரசேகர உட்பட உயர் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--