Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 10 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார், ஜிப்ரான், ஸரீபா)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக அமைச்சர் டளஸ் அழகப்பெருமையின் வழகாட்டலில் நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ள இளைஞர் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட மட்டக்களப்பு மாவட்டத்தில் 105 பேர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர். இவர்களிலுருந்து 14 பேர் இளைஞர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
நாடு பூராகவும் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெற இருக்கின்ற இளைஞர் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.
இத்தேர்த்தலுக்காக மட்டக்களப்பின் 14 பிரதேச செயலகப் பிரிவில் இருந்தும் 105 இளைஞர், யுவதிகள் அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று நண்பகல் நிறைவடைந்த வேட்புமனுத் தாக்கலின்படி ஏறாவூர் நகரில் 21 நியமனப் பத்திரங்களும், வாகரை, ஓட்டமாவடியில் தலா 10 வேட்பு மனுக்களும், களுவாஞ்சிக்குடி, செங்கலடி ஆகிய இடங்களில் மனுக்களும், வாழைச்சேனையில்7, மண்முனை வடக்கில 11, கிரான், போரதீவு பற்றில் 4, வவுணதீவில் 3, ஆரையம்பதி, பட்டப்பிளையில் தலா இருவரும் வேட்பு
மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரி திருமதி ஜே.கலாராணி தெரிவித்தார்.
நாளை முதல் 25ஆம் திகதி வரை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இவர்கள் ஈடுபட உள்ளதுடன் 27ஆம் திகதி காலை 8.00 தொடக்கம் மாலை 4.00 மணிவரை நாடு பூராகவும் உள்ள 332 பிரதேச செயலகப் பிரிவுகளில் தேர்தல் இடம்பெற உள்ளது.
டிசெம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் டிசெம்பர் 18, 19 திகதிகளில் முதல் அமர்வு இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago