Kogilavani / 2011 ஜூன் 25 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
ஸ்ரீலங்கா உள்ளுராட்சி தொழி நுட்பவியல் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 12வது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் நிமால்கருணாதிலக தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றும் இச்சங்கத்தை சேர்ந்த 700க்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பங்கு பற்றினர்.
இதன்போது இச்சங்கத்தின் வேலைத்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டதுடன் இச்சங்கத்தன் அங்கத்தவரர்களாக இருந்து விடைபெறும் உறுப்பினர்கள் 12பேர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
40 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
43 minute ago
1 hours ago