2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1200 குளிர்பான டின்கள் பறிமுதல்

Kogilavani   / 2010 நவம்பர் 11 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோகித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு விற்பனைக்கென கொண்டுசெல்லப்பட்ட 1200 குளிர்பான டின்களை களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, இவை கோட்டைக்கல்லாறு பகுதிக்கு விற்பனைக்காக வானில் கொண்டுசெல்லப்படும்போது கைப்பற்றப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார் தெரிவித்தார்.

சுமார் ஒரு இலட்சத்து 20ஆயிரும் ரூபா பெறுமதியான 1200 வெளிநாட்டு பெப்சி குளிர்பான டின்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த குளிர்பான டின்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதுடன் விற்பனை செய்யப்படவும் இருந்தன.

இவர்கள் மீது மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .