2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஐ.நா.வினால் 13 அரச பாடசாலைகள் புனரமைப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப்பினால் 13 பாடசாலைகளை புனரமைப்பு செய்யவள்ளதாக யுனிசெப் ஊடக அதிகாரி தெரிவித்தார்.

கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய வலய கல்வி பிரிவுகளிலேயே இப்பாடசாலைகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இப்பாடசாலைகள், யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி, வாகரை, கரடியனாறு உட்பட மிகவும் பின்தங்கிய பகுதிகளிலேயே அமைக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--