2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

130 கோடி ரூபாய் செலவில் 18 பாடசாலைகள் கிழக்கில் அபிவிருத்தி

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 18 பாடசாலைகளை முழுமையாக புனரமைப்புச்செய்ய கல்வி அமைச்சின் அனுசரணையுடன் ஐரோப்பிய ஒன்றியம் 130 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனம் இப்பாடசாலைகளை புனரமைப்பு செய்யவுள்ளதாக யுனிசெப் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலை புனரமைப்புடன் 1000 மலசல கூடங்கள், 400 நீர் விநியோகிக்கும் நிலையங்கள், 259 கிணறுகள், சிறிய குடிநீர் திட்டங்கள் என்பனவும் அமைக்கப்பபடவுள்ளன.

இத்திட்டத்தின்  ஆரம்ப வைபவம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முறுத்தானை கிராமத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முறுத்தானை ஸ்ரீமுருகன் வித்தியாலய புனரமைப்பு பணிகளுக்கென இத்திட்டத்தின்கீழ் 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பிரதி தலைமை அதிகாரி புளோரன்ஸி கம்பாரொடா, யுனிசெப் அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--