2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 14 கோடி ரூபாய் செலவில் புதிய தபாலகங்கள்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் சுனாமியினால் அழிவடைந்த 15 தபாலகங்கள் சுமார் 14 கோடி ரூபாய் செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வருவதாக தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரணதுங்க தெரிவித்தார்.

இக்கட்டடங்களுள் கல்குடா,  போரதீவு,  மண்டூர் ஆகிய தபாலகங்கள் புதிதாக அமைக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஏனைய தபாலகங்களின் பணிகள் முழுமையடைந்ததும் விரைவில் திறந்து வைக்கப்படுமென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .