2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாவட்ட இறுதி அபிவிருத்திக் குழுக்கூட்டம் இம்மாதம் 14இல்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

இந்த ஆண்டிற்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி  அபிவிருத்திக் குழுக்கூட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.


மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்காளான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தலைமையிலேயே  இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.


இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், பஷீர் சேகுதாவூத், தமிழ் தேசிய கூட்டடமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட திணைக்களத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--