2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

20 வருடங்களின் பின் செட்டிபாளையம் கண்ணகியம்மன் ஆலயத்திற்கு அதிகளவான பக்தர்கள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 12 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

கடந்த 20 வருடங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகியம்மன் ஆலய வீதி திறக்கப்பட்டமையால்  இந்த வருடம் அதிகளவான பக்தர்கள் ஆலயத்திற்கு சிரமம் எதுவுமின்றி மகிழ்ச்சியுடன் சென்று வருவதாக செட்டிபாளையம் கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 வருடகாலமாக  இந்த வீதியை  மறித்து விசேட அதிரடிப்படையினர் முகாமிட்டிருந்த நிலையில், பொதுமக்களின்; பாவனைக்கு இந்த வீதி பயன்படுத்தப்படாதிருந்தது.

தற்போது இராணுவத்தினர் இந்த வீதியை விட்டு வெளியேறியுள்ளதினால் குறித்த வீதியை மக்கள் தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

கண்ணகையம்மன் ஆலயத்திற்கு  மாவட்டத்தின் நாலாபக்கங்களிலிருந்தம் பக்தர்கள் வருகை தந்தவண்ணமுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .