2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

20 வருடங்களாக மூடப்பட்டுள்ள ஓட்டு தொழிற்சாலையை இயங்க வைக்க கோரிக்கை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

யுத்த சூழ்நிலை காரணமாக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர், முதிரயடி ஏற்றம் (கொடுவாமடு) ஆகிய இடங்களிலுள்ள ஓட்டுத் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரனால், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தொழிற்சாலைகளை இயங்கவைப்பதன் மூலம் சுமார் 500 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கமுடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .