Menaka Mookandi / 2011 மார்ச் 03 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சின் ஊடாக சமூக சேவைகள் திணைக்களத்தினால் கண்பார்வை குறைபாடுடைய இருநூறு பேருக்கு மூக்குக்கண்ணாடிகள் இன்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த நாற்பது வயதுக்கு மேற்பட்ட பார்வை குறைபாடுடைய இருநூறு பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.நஜீம் தலைமையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.சி.அன்ஸார், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஓட்டமாவடி பிரதேச சபைக்குப் போட்டியிடும் முன்னால் பிரதேச சபை தவிசாளர்; கே.பி.எஸ்.ஹமீட், எஸ்.எம்.சஹாப்தீன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்தனர்.
7 minute ago
11 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
14 minute ago