2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

மாகாணத்தின் சிறந்த உப தபாலகத்தில் பெக்ஸ் வசதி இல்லை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

கிழக்கு மாகாணத்தின் சிறந்த உப தபாலகமாக கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி உப தபால் நிலையத்தில் நவீன தொழில்நுட்ப தொடர்பு சாதனங்களான இன்டநெற் மற்றும் பெக்ஸ் வசதிகளின்மையினால் சுமார் 1 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள தபால் நிலையத்திற்கே செல்ல வேண்டிய கஷ்டமான நிலையிலுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ் உப தபால் நிலையம் சாய்ந்தமருதின் கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்திருந்ததனால் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது முழுமையாக சேதமடைந்து தற்போது நெக்கொட் திட்டத்தின் கீழ் வேறோரிடத்தில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ் உபதபால் நிலையத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை பொதுமக்கள் மூலமாக அறிவித்துள்ளதாக உப தபால் அதிபர் எம்.எம்.ஏ.முபாறக் தெரிவித்தார்


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--