2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பொலிஸ் உத்தியோகஸ்தரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற நபர்கள்

Super User   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ். வதனகுமார், எல்.தேவ்,  றிபாயா நூர்)

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் துப்பாக்கியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலத்திற்கு முன்னால் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவர்களில் ஒருவரின் துப்பாக்கியை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.


மாலை. 6.30 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு பாதுகாப்புக் கடமைக்காக சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் துப்பாக்கியே பறிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் சார்ஜன்ட் செனவிரட்ன என்பவரின் துப்பாக்கியே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியை பறித்த  மோட்டார் சைக்கிள் நபர்கள் புகையிரத நிலைய ஒழுங்கைக்கூடாக தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு ரயில் நிலையப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X