2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வெருகலில் பயிர்செய்கையில் ஈடுபட இராணுவ அனுமதிக்கும்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

வாகரை பிரதேசத்திலுள்ள வெருகல் கல்லரிப்பு கதிரவெளி ஆகிய இடங்களில் உப உணவுப் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள பயிர் செய்கையாளர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கப்படும் என 233 ஆவது இராணுவ படைப் பிரிவு கட்டளை அதிகாரி பிரிகேடியர் திலக் வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

கதிரவெளி வின்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின்போதே  அவர் இதனைக் கூறினார்.

குறித்த பகுதிகளில் உப உணவு பயிர்ச் செய்கையில் ஈடுபட இராணுவம் அனுமதி மறுத்துள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பயிர்ச் செய்கையாளர்கள் இராணுவ கட்டளை அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதற்குப் பதில் அளித்த இராணுவ கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் திலக் வீரக்கோன், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் புதையல் தோண்டுதல் உட்பட சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் 136 பயிர் செய்கையாளர்களும் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் உட்பட பெயர் விபரங்களை சமர்பித்தால் அதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்படும். அனுமதி பத்திரம் பெற்றவர்கள் தங்கள் பயிர் செய்கையில் ஈடுப்பட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X