2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மனிதப்பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் அழிப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)
 

வாழைச்சேனை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று சனிக்கிழமை நடத்திய பரிசோதனை நடவடிக்கையின் போது பெருந்தொகையான காலாவதியான மற்றும் மனிதப்பாவனைக்கு உதவாத பல்வேறு உணவுப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
 
காலாவதியான, மனிதப் பாவனைக்குதவாத பிஸ்கட், மற்றும் கேக் வகைகள். பழங்கள். தீன்பண்டங்கள் என்பன இதன்போது கண்டு பிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.
 
கைப்பற்றப்பட்ட இப்பொருட்கள் பிரதேச சபையின் தவிசாளர் தி.உதயஜீவதாஸ், பொதுச்சுகாதார பரிசோதகர்களான எம்.மரியபாலன், ஆர்.இன்பராசா ஆகியோர் முன்னிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X