2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது கோடாரிவெட்டு

Super User   / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ராக்கி)

வாழைச்சேனையில் நேற்றிரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கோடாரியில் வெட்டப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

மா.மகாதேவராஜா என்பவரது வீட்டிற்கு சென்ற இனந்தெரியாத நபர்களே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். மகாதேவராஜா (வயது 35), அவரின்   அமனைவி மா.லீலா (31) மகன் ம. ஜனராஜ் (13) ஆகியோரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

பிரதேசவாசிகளால் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாதேவராஜா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

வாழைச்சேனை மீறாவோடை காளிகோயிலில் இடம்பெறும் வருடாந்த உற்சவத்தின் போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 30 வயதான நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் குறித்த விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X