2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வாகரை, கட்டுமுறிவு மற்றும் தொப்பிகல ஆகிய பகுதிகளுக்கு புதிய பஸ் சேவை

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (றிபாயா நூர்,  ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாகரை, கட்டுமுறிவு மற்றும் தொப்பிகல ஆகிய கிராமங்களுக்கான பஸ் சேவை முதற் தடவையாக கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவினால் இந்த  பஸ் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மற்றும் போக்குவரத்து வசதியற்ற கிராமங்களின் போக்குவரத்து வசதியை சீர்செய்யும் திட்டத்தின் கீழ் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டுமுறிவிலிருந்து வாழைச்சேனை வரைக்கும் மற்றும் தொப்பிக்கலயிலிருந்து கிரான் ஊடாக வாழைச்சேனை வரையுமான இரண்டு பஸ் சேவைகள் நடத்தப்படும் என கிழக்கு மாகாண போக்கு வரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் நாதன் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .