Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
ஆயுதக்குழுக்களிலிருந்து விடுதலை பெற்று புனர்வாழ்வளிக்கப்பட்ட, அங்கவீனமடைந்தோர்களுக்கு தொழிற்பயிற்சியினை வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் தொழிற்கல்வி நிலையமொன்றை கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவை அமைச்சு நிர்மாணிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சமூகசேவைகள் பணிப்பாளர் எஸ்.மணிவண்ணன் தெரிவித்தார்.
தச்சுவேலை, மேசன் வேலை, நீர்குழாய் பொருத்துதல், வீட்டு மின்னினைப்பு உட்பட்ட தொழிற்பயிற்சிகள் இங்கு வழங்கப்படும்.
இக்கல்வி நிலையம் திருகோணமலை லிங்க நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
மாகாண சமூக சேவைகள் அமைச்சு முதற்கட்ட வேலைகளுக்காக 30 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
37 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
7 hours ago