2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வெகுஜன போராட்டம் நடத்தப்படும்; த.ம.வி.புலிகள் கட்சி எச்சரிக்கை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(ஆர்.அனுருத்தன், ரி.எல்.ஜவ்பர்கான்)


  மர்மமான முறையில் காணாமல் போயுள்ள தமது கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி  கடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர், 3 தினங்களுக்குள் விடுதலை செய்யப்படாத பட்சத்தில் அவரை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் வெகு ஜனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மத்திய செயற்குழு சார்பாக அக்கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜாவினால் விடுக்கப்பட்டுள்ள  அறிக்கையிலேயே இவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கடந்த சனிக்கிழமை இரவு முதல் குறித்த உறுப்பினர் காணாமல் போன சம்பவமானது சமாதானத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கவலையையும் எற்படுத்தியுள்ளதுடன், மனிதாபிமானமற்ற ஜனநாயக விரோத செயலாகவும் இது அமைகின்றது.

அத்துடன் மக்கள் மத்தியில் அச்சததையும் பதட்டத்தையும் எற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காணாமல் போயுள்ள மாநகர சபை உறுப்பினரை கடத்தியவர்கள் உடனடியாக விடுதலை செய்து மட்டக்களப்பு மாநகரின் சுமூகமான சூழ்நிலையை பாதுகாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


  Comments - 0

  • Jeevan Thursday, 26 August 2010 03:46 AM

    நல்ல ராமாடா இது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X