2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

காலாவதியான பொருட்கள் காத்தான்குடியில் கைப்பற்றல்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)
காத்தான்குடியில் பெருமளவான காலாவதியான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிலர் வழங்கிய தகவலையடுத்து இப்பொருட்கள் காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளரின் வீட்டில் மறைத்து வைத்திருந்திருந்தபோது, காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் வியாழக்கிழமை மாலை (26.8.2010) கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடி பொதுசுகாதர வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபீர் தலைமையில் பொதுசுகாதார பரிசோதகர்களான பசீர் மற்றும் றஹ்மத்துல்லா ஆகியோர் ஸத்தளத்திற்கு சென்று இப்பொருட்களை கண்டெடுத்து கைப்பற்றியுள்ளனர்.

சிறுவர்களுக்கான பிஸ்கட் வகைகள், கேக், பால்மா பக்கெட்டுக்கள் மற்றும் சில மருந்துப்பொருட்கள் என்பனவே இச்சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X