Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர், ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, சித்தாண்டியிலுள்ள மினி கோப் சிற்றியில் வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பாவனைக்குதவாத பழுதடைந்த பொருட்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் சென்ற பொலிஸ் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் குழு இன்று சனிக்கிழமை கண்டு பிடித்து கைப்பற்றியுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் பொதுமக்கள் சிலர் பழுதடைந்த பொருட்கள் தொடர்பாக முறைப்பாடு செய்ததையடுத்தே கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர், ஏறாவூர் பொலிஸ் அதிகாரிகள் குழு உரிய இடத்தை இன்று காலை திடீரென முற்றுகையிட்டு பொருட்களை பரிசோதனை செய்தது. அப்போது, அங்கிருந்த பொருட்களில் பெருந்தொகையான பொருட்கள் பழுதடைந்த, காலாவதியாகி பாவனைக்குதவாத பொருட்கள் என காணப்பட்டதையடுத்து அப்பொருட்கள் அனைத்தையும் பொலிஸாரும் கூட்டுறவு அதிகாரிகளும் கைப்பற்றினர்.
எதிர்வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு கோப் சிற்றி முகாமையாளர் உட்பட அதன் அதிகாரிகளை ஆஜராகுமாறும் ஏறாவூர் பொலிசார் கட்டளையிட்டனர்.
இம்மினி கோப் சிற்றி கூட்டுறவு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இங்கிருந்து பெருந்தொகையான பால்மா மற்றும் பிஸ்கட்ஓடிக்குளோன், நூடிலஸ் வகைகள், தேங்காய் எண்ணை போன்ற பொருட்களை கைப்பற்றியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி பிரதேசத்திற்கு சொந்தமான பலநோக்குக் கூட்டுறவச் சங்கத்தினால் இம்மினி கோப் சிற்றி நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
30 minute ago
35 minute ago
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
46 minute ago
53 minute ago