Super User / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்குப் பின்னரான தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தல் தொடர்பிலான கருத்தரங்கு நாளை சனிக்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெறவுள்ளது.
நாளை சனிக்கிழமை 4.30 மணியளவில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அஸ்ரப் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வை கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் அ.கன்னைராஜ் நெறிப்படுத்தவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் சிறந்த உறவினை கட்டியெழுப்பும் முகமாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ், முஸ்லிம் கல்விமான்கள் கலந்து கருத்து பகிர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
1 hours ago