Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜௌபர்கான்)
தேசிய சிறைக்கைதிகள் வாரம் இன்று காலை மட்டக்களப்பில் ஆரம்பமாகியது. சிறைக்கைதிகள் கொடி தினத்தையொட்டிய முதலாவது கொடி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதனுக்கு மாவட்ட செயலகத்தில் வைத்து சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டாரவினால் அணிவிக்கப்பட்டது.
சிறைச்சாலையில் இடம்பெற்ற வைபவத்தில் கண்பார்வை குறைந்த கைதிகளுக்கு மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டன. லயன்ஸ் கழக அனுசரணையுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சிறைக்கைதிகள் நலன்புரி சங்க தலைவர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இவ்வைபவத்தில் பங்கெடுத்தனர். தொடர்ந்து 7 நாட்களுக்கு வைபவங்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலை நலன்புரி அதிகாரி எஸ்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
12 minute ago
20 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
3 hours ago
5 hours ago