2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச அரிசி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, காசான்குடா, வடிச்சல், உறுகாமம் ஆகிய மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏறாவூர் மீள்குடியேற்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லிபியாவுக்கான உலக இஸ்லாமிய அழைப்பு இயக்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அரிசியினை வழங்கும் நிகழ்வு அண்மையில் காசான்குடா  பள்ளிவாசலில் இடம்பெற்றது.

லிபியாவுக்கான உலக இஸ்லாமிய அழைப்பு இயக்கத்தினால் காசான்குடா வில் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது தலா 10 கிலோ வீதம் 200 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.

மீள்குடியேற்ற ஒன்றியத்தின் தலைவி திருமதி சர்மிளா ஸெய்யித் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .