Super User / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று இரவு 8.40 மணியளவில் கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஆரையம்பதியை சேர்ந்த சத்தியநாதன் ஜதீஸ்நாதன் (20) என்பவரே கொல்லப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ஆரையம்பதியில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதிய போது குறித்த இளைஞர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் கூரினர்.
குறித்த சடலம் தற்போது ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.
25 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
14 Nov 2025