Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
கிழக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே நேற்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மோஹான் விஜயவிக்கிரம ஆகியோரை திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார் .
ஐ.நா வின் வதிவிடப் பிரதிநிதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் உதவி வழங்கும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கிழக்கு மாகாணத்திற்கான இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு துறைகளிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் உட்பட வெளிநாட்டு உதவி வழங்குனர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் தங்கியுள்ள ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியை உள்ளக்கிய இக்குழுவினர், தோப்புர், கிளிவெட்டி இடைத்தங்கல் முகாம் உட்பட மூதூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்து ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களை பார்வையிடவுள்ளதுடன், பின்னர் வெருகல் வழியாக மட்டக்களப்பு மாவட்டதைச் சென்றடையவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் உட்பட மாவட்ட திணைக்கள தலைவர்களை சந்தித்து இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் இக்குழுவினர் கேட்டறியவுள்ளனர்.
நாளை வியாழக்கிழமை கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திகிலிவெட்டை மற்றும் குடும்பிமலை ஆகிய இடங்களுக்கு இக்குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.
2 hours ago
12 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Sep 2025