2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கட்டாக்காலி மாடுகள் பொலிஸ் நிலையத்தில் கட்டி வைப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

காத்தான்குடியில் இரவு நேரங்களில் வீதியில் திரியும் கட்டாக்காலி மாடுகளை பொலிஸாரின் உதவியுடன் காத்தான்குடி நகரசபை ஊழியர்கள் பிடித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு கட்டி வைத்தனர்.

இவ்வாறு பிடித்துக் கட்டப்பட்ட 24 மாடுகளின் உரிமையாளர்கள் நகரசபைக்கு தண்டப் பணமாக பெரிய மாட்டிற்கு 2ஆயிரம் ரூபாவும், கன்றுகளுக்கு  ஆயிரம் ரூபா வீதமும் செலுத்தி தமது மாடுகளை விடுவித்துச் செல்லலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  தண்டப்பணம் செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காத்தான்குடி நகரசபையின் பிரதித் தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் இவ்வாறு கட்டாக்காலி மாடுகளை நகரசபை ஊழியர்கள் பிடித்து கட்டிவைத்திருந்தபோது அவர்கள் தாக்கப்பட்டு மாடுகளை விடுவித்து சென்றதாலேயே இம்முறை பொலிஸாரின் உதவி பெறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--