2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கரடியனாறு வெடிப்பில் காயமுற்ற மேலுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 18 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ். வதனகுமார், ஜவ்பர்கான் )

நேற்று நடைபெற்ற கரடியனாறு வெடிச்சம்பவத்தில் காயமுற்று இருந்து 22 பொலிஸாரில் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு அதிதீவிர சிகிச்சைப்பிரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மு.ப.11.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் காயமுற்ற 44 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 4 பேர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 28 வயது உடைய பொலிஸ் கான்ஸ்டபிள்  குமார, அதிதீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை  இரவு 7.30 க்கு உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--